திருமணமாகி 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனைவியை கணவர் தீ வைத்து எரித்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி தேவி கிருபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (40) அச்சக தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி வித்யா (35). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது வரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாம். சம்பவத்தன்றும் இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மெனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். வித்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிவகாசி அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். அங்கு வித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் கணவர் பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.