தாம் ஆன்மீக அரசியல் ஈடுபட்டுவருதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர், தலைமன்னார், இறங்குதுறை கிராமம், கீளியன் குடியிருப்பு, தாள்பாடு மற்றும் பேசாலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களை சந்தித்துக் கலந்துரையாடிள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
இருப்பதை பாதுகாத்துக் கொண்டு மக்களின் உரிமைகளையும் வளமான எதிர்காலத்தையும் பெற்றுக்கொள்கின்ற ஆன்மீக அரசியலை நான் மேற்கொண்டு வருகின்றேன். என்னுடைய அரசியல் வழிமுறையை மக்கள் பலப்படுத்துவார்களாயின் வளமான எதிர்காலத்தை என்னால் ஏற்படுத்த முடியும்.
உவர்நீர் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு, இறால் மற்றும் நண்டு வளர்ப்பு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் அதனை உடனடியாக ஆரம்பிக்க தேவையான உதவிகள் வழங்கப்படும்.
இதேவேளை, பலநாள் மீன்பிடியில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு ஐம்பது வீதமான மானிய அடிப்படடையிலும் மீதி கடன் அடிப்படையிலும் பலநாள் மீன்பிடி கலங்களைப் பெற்றுத் தரமுடியும்.
இந்நிலையில், உடனடியாக தீர்த்து வைக்க கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.