ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் வெளியானதன் எதிரொலி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பெற்றப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்களின் எதிரொலியாக காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவை அடுத்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அவர் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.