முன்னாள் பிரதியமைச்சருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை..!!

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்தது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.