விஜய்யை பார்த்து எல்லோரும் பயப்படுவது ஏன்?

தமிழ் சினிமாவில் விஜய்-முருகதாஸிற்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆம், இவர்கள் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மூன்று படங்களும் நல்ல வரவேறபை பெற்றது.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் நாளை மறுநாள் வெளிவரவுள்ளது. இப்படத்திற்காக பல பேட்டிகள் முருகதாஸ் கொடுத்து வருகின்றார்.

அதில் மனோபாலாவிற்கு கொடுத்த பேட்டியில் முருகதாஸிடம் ‘ஏன் உங்கள் படத்திற்கு மட்டும் பிரச்சனை வருகின்றது?’ என கேட்டனர்.

அதற்கு முருகதாஸ் ‘என் படத்திற்கு என்று இல்லை சார், விஜய் சார் படத்திற்கு தான் வருகின்றது, ஏனெனில் அவர் வளர்ச்சியை கண்டு ஒரு கூட்டம் அஞ்சுகின்றது.

அவர் எங்கு வளர்ந்து விடுவாரோ என்று பயப்படுகிறார்கள், அதனால் தான் இந்த பிரச்சனைகளை செய்கின்றனர்.

ஆனால், அதுவே அவரின் வளர்ச்சி என்பது அவர்களுக்கு தெரியவில்லை’ என்று முருகதாஸ் கூறியுள்ளார்.