சுதீப்பிற்கு பரிசளித்த சல்மான் கான்..!!!

பாலிவுட் திரையுலகில் மாஸ் ஹீரோகளில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் சல்மான் கான்.

அண்மையில் கூட இவரது நடிப்பில் தபங் 3 வெளிவந்து மிக பெரிய அளவில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படத்தில் இவருக்கு வில்லனாக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் நடிகர் கிச்சா சுதீப்பின் நடிப்பை பாராட்டும் விதமாக சல்மான் கான் சுதீப்பிற்கு ரூ 1.50 விலை மதிப்புள்ள BMW கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதனை சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி கூறியுள்ளார்.