நாயை காப்பாற்ற போய் பரிதாபமாக உயிரிழந்த இளம் இயக்குனர்..!!

மலையாள சினிமாவில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விவேக். த்ரிஷ்யம், மெமரிஸ் போன்ற படங்களில் பயிபுரிந்துள்ளார்.

தமிழில் குறும்படங்களை இயக்கிய விவேக் கடந்த மாதம் 22ம் தேதி தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் தாண்டி சென்றுள்ளார்.

அப்போது திடீரென குறுக்கே வந்த நாயை காப்பாற்ற பிரேக் பிடிக்க நிலை தடுமாறி இருவரும் வேகமாக கீழே விழுந்துள்ளனர்.

இதில் விவேக்கிற்கு தலையில் பலத்த காயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

30 வயதான இளம் இயக்குனர் இறந்திருப்பது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.