ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான். ஏனெனில் திருமணத்திற்கு முன்பு இருந்த ஒருவரின் வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிறகான ஒருவரின் வாழ்க்கைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும்.
அது மட்டும் இல்லை, பெண்களுக்கு திருமணநாள் என்பது மறக்க முடியாத ஒரு தருணம். புதிய உறவு கிடைத்தாலும், குடும்பத்தினை விட்டு பிரிய வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.
https://www.facebook.com/watch/?v=946403665754065
அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில் தங்கையின் பிரிவினை தாங்க முடியாது அண்ணன் கதறி அழுகிறார். தங்கையும் ஆறுதல் கூறி கொண்டே அழுகிறார்.
இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் இப்படி ஒரு அண்ணன் தங்கை பாசமா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.