அறிவியலின் வளர்ச்சி அதிகரிக்கும் அளவிலேயே எமது இளைய தலைமுறையினரின் தேடல்களும் பல மடங்குகளாக வளர்ந்து கொண்டே செல்கின்றது.
இதன் காரணமாக தற்போது சிறுவர்கள், மாணவர்கள் தங்களின் அறிவுத் தேடல்களின் அடுத்த கட்டமாக கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துகிறார்கள்.
அந்த வகையில், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சுந்தரலிங்கம் பிரணவன் மாற்றுத்திறனாளிகளுக்கான சூரிய சக்தி (Solar power) சைக்கிளினை கண்டுபிடித்து சாதணை படைத்துள்ளார்.
குறித்த சிறுவன் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 8 ல் கல்வி பயின்று வரும் நிலையில்,மாற்றுத்திறனாளிகளுக்காக கழிவுப்பொருட்களினைக் கொண்டு தனது தாத்தாவின் உதவியுடன் தனது விடா முயற்சியின் மூலம் இதனை கண்டுபிடித்துள்ளர்.