தமிழ் சினிமாவிற்கு மைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். கடந்த ஜூன் மாதம் ரத்தன குமார் இயக்கத்தில் “ஆடை” திரைப்படம் இவர் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வெளியானத்திலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்களின் பாராட்டுகளை பெற்றார் நடிகை அமலா பால். இதனை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான “தி லஸ்ட் ஸ்டோரி” வெப் சீரிஸை தெலுங்கில் அமலா பாலை வைத்து ரீமேக் செய்ய உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார், இப்படத்திற்காக தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார் நடிகை அமலா பால். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால்.