காதலிக்க மறுத்த மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரன்….

இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் இருக்கும் எர்ணாகுளம் அருகேயுள்ள கழுர் பகுதியை சார்ந்தவர் இவா டேனியல். இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு இதே பகுதியை சார்ந்த சபீர் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சபீருடன் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார். சபீர் மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தகாக தெரியவருகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சபீர் இருந்து வந்துள்ளார்.

மாணவி நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற நிலையில்., மாலையில் வீடு திரும்பவில்லை. இவருடன் சேர்ந்து சபீர் பணியாற்றி வந்த காரும் மாயமாகியுளளது. இதனையடுத்து மாணவி வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்ததால் சபீர் மாணவியை கடத்தியிருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். இந்த நேரத்தில்., சபீர் கடத்தி வந்த கார் தமிழகத்தினை நோக்கி வருவதாக தகவல் வந்ததை அடுத்து., அணைத்து சோதனை சாவடியிலும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில்., சபீர் இயக்கி வந்த காரானது வால்பாறை அருகேயுள்ள வாட்டர் பால்ஸ் என்ற பகுதியில் வந்த நேரத்தில் காவல் துறையினர் மடக்கிப்பிடித்து சோதனை செய்கையில்., காரில் சபீர் மட்டும் இருந்த நிலையில் மாணவி இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும்., காதலிக்க மறுப்பு தெரிவித்த மாணவியை காரில் கடத்தி அங்குள்ள வரட்டுப்பாறை பகுதியில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்து உடலை வனத்தில் வீசி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியின் உடலை அதிகாலை மீட்ட காவல் துறையினர் எர்ணாகுளம் அனுப்பிவைத்த நிலையில்., இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.