தர்பார் ரஜினியும், பிகில் விஜய் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்பார்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்தது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தபடத்தின் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று கூறுவதாக வசனம் உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு உள்ள திஹார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா, சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவதாக புகார்கள் எழுந்ததுஇது தொடர்பான சிசிடிவி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்ட நிலையில், தமிழக மீன் வளைத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,நானும் இதுபற்றி எல்லாம் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் கூறுவார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தர்பார் படத்தில் அப்படி கூறியிருப்பது இந்த கருத்து நல்ல கருத்துதான். பொதுமக்கள் அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்துதான். அதற்கு மேல் இதுபற்றி பேச விரும்பவில்லை’’என்று கூறினார்.
இதை தொடர்ந்து, நாங்கள் தர்பார் படத்தையும், பிகில் படத்தையும் ஒன்றாக ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம். அந்த நிலைக்கு ஏற்ப காட்சிகளை திரையிட அதிகாரிகள் அனுமதி தருகின்றனர். எங்களுக்கு அந்த இரண்டும் ஒன்று தான் என்றார்.