அழகிய அசுராவாக பாடலுக்கு ஷெரின் வெளியிட்ட டிக்டாக் காட்சி..

கடந்த 2002ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து, விசில் படத்தில் நடித்து அழகிய அசுரா பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காமல், நீண்ட வருடமாக எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்தது.

ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை மீண்டும் கவர்ந்து இழுத்தார். தற்போது பிஸியாக இருக்கும் ஷெரின், மீண்டும் அழகிய அசுரா பாடலுக்கு நடந்து செல்வதுபோல் ஒரு டிக்டாக் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.