இன்று அதிகளவானவர்கள் பயன்படுத்தும் WhatsApp ?

இன்று அதிகளவானவர்கள் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை ஏற்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் செயலியையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதன் ஊடாக படங்களை அனுப்பும்போது கைப்பேசியில் அதிக சேமிப்பு கொள்ளளவினை எடுத்துக்கொள்ளும்.

உதாரணமாக இச் செயலியின் ஊடாக அன்றாடம் Good Morning வாழ்த்தினை பட வடிவில் பெறுபவர்கள் ஒரு கட்டத்தில் மேலும் புகைப்படங்களை சேமிக்க இடம் இல்லது தடுமாறுவார்கள்.

இப் பிரச்சினைகளுக்கு தீர்வாக Signal எனும் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் போன்றே செயற்படக்கூடிய இச் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் தானாகவே அழியும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

View Once எனும் குறித்த வசதி மூலம் அனுப்பப்பட்ட புகைப்படத்தினை பார்வையிட்டதும் நிரந்தரமாகவே அழிந்துவிடுகின்றது.