ஐபோன் திரைகளை பாதுகாக்கும் கவசம்..!!

அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இலத்திரனியல் சாதனங்களை அடிப்படையாகக் கொண்ட துணைச் சாதனங்களை உருவாக்கம் செய்யும் நிறுவனமாக OtterBox காணப்படுகின்றது.

இந்த நிறுவனம் ஐபோன் திரைகளுக்கான புதிய கண்ணாடிக் கவசம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதற்கு Amplify Glass எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முக்கிய பணியாக ஐபோன் திரைகளில் கிருமிகள் சேர்வதை தடுப்பதாகும்.

இது ஐபோன் திரைகளை சேதமடைவதிலிருந்து பாதுகாப்பதுடன் பார்வைத் தெளிவு மற்றும் அதிக தொடுகை உணர்வு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது விரைவில் ஐபோன் பயனர்களின் பாவனைக்காக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.