ஈரான் – அமெரிக்காவை அன்பாக அழைக்கும் பாப்பரசர்..!! காரணம் இதுதான்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமையை சீர்செய்ய அமெரிக்காவும் ஈரானும் அவசரமாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பாப்பரசர் பிரன்ஸிஸ் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கானில் விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட முன்வர வேண்டும்.

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் இரு நாடுகளையும் கேட்டுள்ளார்.