இன்று இரவு வானில் நிகழவுள்ள காட்சி!

இவ்வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வௌி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே புவி கடக்கும் போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும்.

மேலும் கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த கிரகண நிகழ்வை இலங்கை மட்டுமல்லாது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் இது முதலாவது ஆகும். மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை பார்த்து ரசிக்க முடியும். இன்று இரவு 10.38 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.