கோட்டாபய சீனா புறப்பட முன்னர் இலங்கை வருகிறார் அமெரிக்க அதிகாரி!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இலங்கை வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பயணத்தின் போது, இலங்கையிலுள்ள அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்திக்கவுள்ளார். பிராந்திய பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கலந்துரையாடுவார் என தெரிய வருகின்றது.

இதனையடுத்து அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் பாகிஸ்தானுக்கான விஜயமொன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.