குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே எளிமையாக பிரட் கொண்டு செய்யலாம். இது ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த பிட்சா சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பிரட் – 4 துண்டுகள்
பாஸ்தா சாஸ் – 4 டீஸ்பூன்
வெங்காயம்
குடைமிளகாய்
தக்காளி – 1/2 கப் (நறுக்கியது)
சீஸ் – 2 துண்டுகள்
சில்லி ப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் 2 பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் பாஸ்தா சாஸைத் தடவ வேண்டும். பின்னர் அந்த ஒவ்வொரு பிரட் துண்டுகளின் இரண்டு முனைகளிலும் சிறிது காய்கறிகளை வைக்க வேண்டும். அடுத்து அதன் மேல் 2 சீஸ் துண்டுகளை நான்காக வெட்டி, சிறு துண்டுகளாக மடக்கி, காய்கறிகளின் மேல் வைக்கவும். பிறகு அதன் மேல் மீதமுள்ள பிரட் துண்டுகளை வைக்க வேண்டும். இறுதியில் பிரட் டோஸ்டரில் வெண்ணெயைத் தடவி, அதன் மேல் இந்த பிரட் துண்டுகளை வைத்து, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்தால், பிட்சா சாண்ட்விச் ரெடி!!!