தர்பார் ஆந்திரா தெலுங்கானாவில் அடித்து நொறுக்கிய வசூல்…!!

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று பிரமாண்டமாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், விமர்சன ரீதியாக படத்திற்கு கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் தான் வந்துக்கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் தர்பார் படம் தெலுங்கில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்துள்ளது, முதல் நாள் தர்பார் தெலுங்கில் ரூ 4.5 கோடி வரை ஷேர் மட்டுமே கொடுத்துள்ளதாம்.

இவை மிகப்பெரும் சாதனை என தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது, மேலும், நாளை மகேஷ்பாபு படம் ரிலிஸாவதால் கொஞ்சம் தர்பாருக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.