அசுரன் புகழ் நடிகைக்கு நேர்ந்த சோகம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மஞ்சு வாரியார். இப்படத்தால் அவருக்கு தமிழில் வரவேற்பு கூடியது.

தற்போது திகில் கதையில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்தது. இதில் சண்டை காட்சியில் அவர் டூப் வேண்டாம் நானே செய்கிறேன் என ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் கூறி கயிறு கட்டிக்கொண்டு உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போது கால், இடுப்பு என பலமான காயங்கள் ஏற்பட்டன.

இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் வரும் 12 ம் தேதி நடைபெறுவதாக இருந்த நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொள்ள முடியாத நிலை குறித்து கடிதம் அனுப்ப நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.