கவர்ச்சி உடையில் வந்த நடிகை.. கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்த ரசிகர்.!

பிரபல நடிகர் சைப் அலிகான் மகள் சாரா அலிகான். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்து பாலிவுட்டில் வெளியான, கேதர்நாத் மற்றும் சிம்பா போன்ற படங்கள் மெஹா ஹிட்டை கொடுத்தது.

தற்போது சாரா அலிகானின் நடிப்பில் கூலி நம்பர் 1 என்ற படம் வெளியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான் தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டுவருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். சிலர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


ஒரு ரசிகர் மட்டும் சாராவின் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டார். உஷாரான சாரா தனது கையை எடுத்துக்கொள்ள பாதுகாப்பு வீரர் ஒருவர் அந்த ரசிகரை அங்கிருந்து விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.