பெரும் போர்ப்பதற்றத்தை உருவாக்கிய ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொலைக்குக் காரணமான இன்ஃபோர்மர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கொல்ல, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து இன்ஃபோர்மர்கள் கொடுத்த தகவலே, அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3ஆம் திகதி பாக்தாத் விமான நிலையத்தின் அருகே, டிரோன் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். முன்னதாக அவர், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்து ‘சாம் விங்ஸ்’ நிறுவன பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, பாக்தாத் வந்திறங்கியுள்ளார்.
இந்த இரு இடங்களில் இருந்து இன்ஃபோர்மர்கள் அமெரிக்காவுக்கு அளித்த தகவலே சுலைமானியை கொலை வீழ்த்துவதற்கு உதவியாக இருந்துள்ளது. பாக்தாத் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் அதிகாரிகள் 2 பேர், ‘சாம் விங்ஸ்’ விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் என 6 பேரை ஈராக் விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வளையத்தில் உள்ள 2 விமான நிறுவன ஊழியர்களில் ஒருவர் உளவாளி என்றும், மற்றொருவர் விமான பணிக்குழுவை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.