இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர பாலியல் வன்முறைகள் காரணமாக சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது.
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரெய்லி நவாப்கஞ்ச் பகுதியை சார்ந்த 4 வயதாகும் சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இவர் தீடிரென மயமாகவே., இவரை காணாது பெற்றோர்கள் தேடியலைந்தனர்.
பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகாரளித்த நிலையில்., இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில் சிறுமி அங்குள்ள வயல்வெளியில் பிணமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் விசாரணையில்., இப்பகுதியை சார்ந்த உமகன்ட் (வயது 32) மற்றும் முரளி லால் (வயது 24) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொடூரம் கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி மாதத்தின் 26 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்த வழக்குதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகளின் முன்னிலையில் வந்ததை அடுத்து., சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்களுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.