மேடையிலேயே கதறி அழுத ரோஜா சீரியல் வில்லி ஷாம்லி……

சினிமா நட்சத்திரங்களை போலவே தொலைக்காட்சி நடிகர்களும் அதிக அளவில் பிரபலம் ஆகின்றனர். சொல்லப்போனால் சீரியல்களில் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை பிடித்துவிட்டால் அவர்களை தங்கள் வீட்டில் ஒருவர் போலவே பாவிப்பார்கள்.

ஆனால் சீரியலில் வில்லன் மற்றும் வில்லியாக நடிப்பவர்கள் தான் ரொம்ப பாவம். அதிக வெறுப்பை பொது மக்களிடத்தில் பெறுகிறார்கள்.

சமீபத்தில் சன் டிவி தொடர்களில் நடிப்பவர்களை கவுரவிக்க சன் குடும்பம் விருதுகள் விழா நடத்தப்பட்டது. அதில் இளம் வில்லியாக ரோஜா சீரியல் சிறந்த நடிகை ஷாம்லிக்கு விருது அளிக்கப்பட்டது. அதை வாங்கிய அவர் மேடையிலேயே கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.

“என் அம்மாவே சீரியலில் மற்ற நடிகைகளை பார்த்து நல்லா நடிக்கிறார்கள் என கூறுவார். ஆனால் ஒருநாள் கூட என்னை கூறியதில்லை. நான் விருது வாங்கியது கூட உங்களுக்கு பிடிக்குமா என தெரியவில்லை” என கூறி ஷாம்லி அழுதுள்ளார்.

இது அரங்கத்தில் இருந்தவர்களை கண்கலங்கவைத்துவிட்டது.