ஈரானில் பிரித்தானிய தூதர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு அந்நாடு மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
Tasnim News Agency வெளியிட்ட செய்தியில் ஈரானுக்கான பிரித்தானிய தூதர் ராபர்ட் மாகெயர் (53) தலைநகர் Tehran-ல் உள்ள Amir Akabir Universityல் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அங்கு புகைப்படம் எடுத்த போது கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ராபர்ட் பிரித்தானிய தூதரகத்துக்கு திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராபர்ட் கைது தொடர்பில் அமெரிக்கா அதிரடியான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், பிரித்தானிய தூதர் ராபர்ட் கைது செய்யப்பட்டதற்கு ஈரான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு ஈரான் என்ன பதிலளிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.