சினிமா படங்களின் மீது ஒரு ஈர்ப்பு வருவதில் ஒளிப்பதிவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சிலர் பிரபலமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
மலையாள சினிமாவை சேர்ந்த இவர் ரஜினியின் தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். நீண்ட வருடங்களுக்கு பின் அவர் அண்மையில் தர்பார் படம் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்தார்.
விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின் மகன் சர்வஜித் இன்னும் டீன் ஏஜ் வயதை கூட தாண்டவில்லை. இவர் தற்போது துல்கர் சல்மான நடிக்கும் வரனே ஆவஷ்யமுண்டு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.