நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அலைஸ் வெல்ஸ்..!!!

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான தலைமைப்பிரதி உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் இலங்கையுடனான மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா மற்றும் பகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ள நிலையில் எதிர்வரும் 13 -14 ஆம் திகதி வரை கொழும்பில் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இலங்கையின் புதிய அரசாங்கம் இதுவரை கையெழுத்திட மறுத்த எம்.சி.சி ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளதால், இந்த ஒப்பந்தத்தை பரிசீலிக்க அமெரிக்கா இலங்கைக்கு அவகாசம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அலைஸ் வெல்ஸ் அது குறித்து ஆராய இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.