இறந்த பெண்ணின் கர்ப்பப்பை எடுத்து இரண்டு வருடங்கள் கழித்து குழந்தை பெற்ற பெண்..!! அமெரிக்காவில் நடந்த அதிசயம்..!

இறந்த பெண்ணின் கர்ப்பப்பை எடுத்து இரண்டு வருடங்கள் கழித்து பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க நாட்டில், பிலடெல்பியா என்னும் பகுதியை சேர்ந்தவ 33 வயது ஜெனிபர் கோப்ரெட் என்னும் பெண்ணுக்கு பிறவியில் இருந்தே கர்ப்பப்பை கிடையாது. இதன் காரணமாக, இவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்தும் டிரியூ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து, இவர்களுக்கு ஒரு குழந்தை வேண்டும், அதையும் அவரே பெற்றெடுக்க வேண்டும் என்றும், கணவர் ஜெனிபர் கோப்ரெட் ஆசைப்பட்டார்.

எனவே, இவர் இது குறித்து மருத்துவர்களை நாடியுள்ளார். அதற்கு, மருத்துவர்கள் அளித்த அறிவுரைப்படி ஜெனீபருக்கு இறந்த பெண் ஒருவரின் கருப்பை பொருத்தினால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இறந்துபோன பெண்ணின் கர்ப்பப்பை ஜெனிபர்க்கு பொருத்தப்பட்டது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜெனிபர் கர்ப்பமடைந்துள்ளார். இதை தொடர்ந்து, தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் மிகப்பெரிய மருத்துவ சாதனையாக கருதப்படுகிறது. உலகளவில் 2 பேர் மட்டுமே இறந்த பெண்ணிடம் தானமாக பெற்ற கருப்பை மூலம் குழந்தை பேறு அடைந்துள்ளனர். அதில் ஜெனீபர் 2-வது என்பது குறிப்பிடத்தக்கது.