இந்தியா ‘ஏ’ அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்கள் வைரலாகின.
எனவே, இந்த சுற்றுப்பயணத்திற்கு அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் இடம்பிடித்ததாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இதுகுறித்து ஹார்டிக் பாண்ட்யாவின் உடற்பயிற்சி நிலை குறித்த விவரங்களை அவரதுபயிற்சியாளர் எஸ்.ராஜினிகாந்த் வெளியிட்டார்.
ஹார்டிக் தகுதியற்றவர் மற்றும் உடற்பயிற்சி தேர்வில் தேர்ச்சிப் பெற தவறிவிட்டார் என்ற கூற்றை ரஜினிகாந்த் முற்றாக நிராகரித்தார்.
ரஜினிகாந்த் கூறியதாவது, அவர் 100% உடற்தகுதியுடன் உள்ளவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் அடுத்து அடுத்து சர்வதேச போட்டிகளில் விளையாடி பணிச்சுமையை எடுத்துக்கொள்வதை நான் விரும்பவில்லை.
பாண்ட்யாவுக்கு இதுவரை உடற்பயிற்சி சோதனை எதுவும் நடத்தப்படவில்லை , எனவே அவர் எந்த சோதனையிலும் தோல்வியடைந்தாரா என்ற கேள்விக்கே இடமில்லை.
அவர் இப்போது யோயோவில் 20 மதிப்பெண் பெற முடியும் என்று கூறியுள்ளார்.