இந்தோனேசியாவில் பிறந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்துள்ளார். அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும் 2012-ல் புவியியலில் முனைவர் பட்டம் பெற லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், லண்டனில் இவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்தது, மட்டுமன்றி அவர்களை சித்தரவதை செய்த வீடியோ மூலம் போலீசார் உடனடியாக அவரை கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் மான்செஸ்டர் நகரில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் சினாகாவை வெளியில் விட்டால் நிலமை இன்னும் மோசமாகிவிடும் எனக் கருதி பல சோதனைகளுக்குப் பின் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் அதிக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இதுவே எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அவர் 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதில் 70 பேர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளனர், போலீஸார் மற்றவர்களை தேடி வருகின்றனர். அந்த கொடூரன் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம்.
மேலும், அவர்களுக்கு மது கொடுத்து போதையாக்கிவிட்டு அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வதாகத் தெரிவித்துள்ளார். மறுநாள் காலை அவர்களும் போதையின் களைப்பு என நினைத்துக் கொள்வார்களாம். நியூயார்க் டைம்ஸ் செய்தி படி 2017-ம் ஆண்டு 18 வயது இளைஞரை வன்புணர்வு செய்த போது போதையில் இருந்த இளைஞர் திடீரென எழுந்து பார்க்க அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி வந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே சினாகாவின் குற்றச் செயல்கள் தெரியவந்தது, இதனால் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.