விருது விழாவில் ரம்யா கிருஷ்ணன் போட்டோஷூட் தற்போது ” TALK OF THE TOWN ” – ஆக இருக்கிறது. அழகுனா அழகு ! அப்படி ஒரு அழகு டா ! இப்போ ஹீரோயினா நடிக்குறவங்க கூட இவ்ளோ அழகா இருந்துருக்கமாட்டாங்க.
80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது குயின் வெப் சீரிஸ் இங்கு பார்த்தாலும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
சிறுவயது ஜெயலலிதாவாக ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிஹா நடித்துள்ளார். இளமைக்கால ஜெயலலிதாவாக துருவங்கள் 16 படத்தின் நாயகியான அஞ்சனா ஜெயபிராகாஷ் நடித்துள்ளார்.