சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்து கொள்ள வந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கராத்தே உடை அணிவதற்கு கூட வசதி இல்லாமல் அவதிப்பட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஐந்து வயது முதல் மேல் மூத்தோர் வரை நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 வயது முதல் மேல் மூத்தோர் வரை கலந்து கொண்டு தனிப்பிரிவு குழு பிரிவு என வயது வாரியாக நடத்தப்பட்ட போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
இது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் மற்றும் சக வீரர் மற்றும் வீராங்கனைகள் இடையே மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. என்றாலும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் கராத்தே சீருடையில் வந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அந்த உடையை வாங்குவதற்கு கூட வசதி இல்லாமல் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று வந்த ஒவ்வொரு அரசு பள்ளி மாணவ, மாணவிகளையும் சம்பந்தப்பட்ட போட்டி ஏற்பாட்டாளர் கண்டுகொள்ளவே இல்லை என்பது அவர்களது பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.