பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகியுள்ளது ரஜினியின் தர்பார் படம். சென்ற வியாழக்கிழமை ரிலீஸ் ஆன இந்த படம் வசூல் குவித்து வருகிறது.
நான்கு நாட்களில் 150 கோடி ருபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக அதிகறாரபூர்வமாக லைகா அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஐந்தாம் நாள் விவரங்கள் வெளிவந்துள்ளது. திங்கட்கிழமை சென்னை பகுதியில் 86 லட்சம் வசூலித்துள்ளது தர்பார். இதன் மூலம் மொத்த சென்னை வசூல் 8 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது.
மேலும் இன்று முதல் தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாடு முழுவதும் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.