உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சை பிறியில் இருந்த குழந்தையை நாய் தாக்கி, குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை ஊழியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நாயை விரட்டியடித்துள்ளனர்.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான குடும்ப உறுப்பினர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளே நுழைந்த நேரத்தில், கழுத்தில் பல காயத்துடன் குழந்தை தரையில் இறந்து கிடந்துள்ளது, இதனை கண்ட உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள பருகாபாத் நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர அறுவை சிகிச்சை மையத்திற்குள் திங்கட்கிழமை நோயினால் கொலை செய்யப்பட்ட குழந்தை சடலம் இருந்துள்ளது.
இந்த தனியார் மருத்துவமனையானது அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், அறுவை சிகிச்சை பிரிவிற்குள் இருந்து இரவு நேரத்தில் நாயொன்று வெளியே சென்றதாகும், நாய் வெளியே சென்ற இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாகவே குழந்தை இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணையின் போது குழந்தையுடைய தந்தை ரவிக்குமார் தனது மனைவி காஞ்சனாவை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார்.
பின்னர் குழந்தை பிரசவிக்க அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின்னர் காஞ்சனா வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் மட்டும் வெளியான நிலையில், இரண்டு மணிநேரம் கழித்து குழந்தையை பிணமாக கண்டுள்ளனர்.
மேலும்., குழந்தையின் உடலில் காயமும், குழந்தையின் உடல் தரையில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.