தற்போதெல்லாம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது வழக்கமாகிவிட்டது. சச்சின், M.S.தோனி, மில்கா சிங், மேரி கோம் போன்ற விளையாட்டு வீரர்களின் வாழக்கை வரலாற்றைப் பற்றி எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி அடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து கபில்தேவ், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்தியப் பெண்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமியின் பயோபிக் உருவாகிறது.
இவர் ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது இவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
“சாதக் எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் இவரின் பயோபிக் உருவாக உள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா நடிக்க உள்ளதாக உள்ளதாகச் வெளியாகி இருக்கிறது.