பாலிவுட் சினிமாவில் நிறைய தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் பிரபலமானவர் கபில் ஷர்மா.
இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே சிரித்து சிரித்து அனைவரின் வயிறும் வலித்துவிடும். அந்த அளவிற்கு அவர் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும்.
கபில் ஷர்மா தனது நீண்டநாள் காதலியான ஜின்னி என்பவரை திருமணம் செய்தார், கடந்த டிசம்பர் 10ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் முதன்முதலாக ஷேர் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்
Meet our piece of heart “Anayra Sharma” ❤ ? #gratitude pic.twitter.com/2z1dNco7Iz
— Kapil Sharma (@KapilSharmaK9) January 15, 2020