அஜித்தை தொடர்ந்து முன்னணி நடிகரின் படத்தில் ரங்கராஜ் பாண்டே, யாருடன் தெரியுமா?

அஜித் அவர்கள் நடித்து சென்ற வருடம் தமிழில் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் நேர்கொண்ட பார்வை.

இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று நம் அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் இப்படத்தில் அஜித்தை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே அவர்கள் நடித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு பாலிவுட் படத்திலும் ரங்கராஜ் பாண்டே நடிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.