வயல் நிலங்களில் காணப்படும் சிறிய செடியே பழம்பாசி. இதை நிலத்துத்தி என்றும் முன்னோர் அழைத்தார்கள்.
இந்தச்செடி, சிறிய இலைகளுடன் அடர் மஞ்சள் மலர்களின் மேல்புறம் முட்கள் போன்ற முடிகளுடன் காணப்படும்.
இயற்கைப் படைப்பில் சாதாரணமாக எங்கும் கிடைக்கும்.
நன்மைகள்
- உடல் உறுப்புகளின் உட்சூட்டைக் குறைக்கும்
- மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது
- நரம்புத்தளர்ச்சி, வலிப்பு வியாதிகளை குணமாக்கும்
- இரத்த அழுத்த பாதிப்புகளை விலக்கும்
- இரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும்
- ஜுரம் மற்றும் மூச்சு பாதிப்புகளை சரியாக்கும்
- உடல் எடையைக் குறைக்கவைக்கும். உடல் சூட்டு கட்டிகள், மூல பாதிப்புகளை குணமாக்கும் தன்மை வாய்ந்தது.
- பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்புக்கு சிறந்த தீர்வாகிறது.
வெள்ளைப்படுதலுக்கு அரிய மருந்து
பழம்பாசி இலைகளைப் பறித்து நன்கு அலசி, சீரகத்துடன் அரைத்து நீர் அல்லது மோரில் கலந்து தினமும் காலையில் காபி டீ குடிப்பதற்கு முன் குடித்துவர வெள்ளைப் படுதல் பாதிப்பு சரியாகிவிடும்.
தாது விருத்தி
உடல் சூட்டால் சில ஆண்களுக்கு, சிறுநீர் கழிக்கும்போது அல்லது தூக்கத்தில் உயிரணுக்கள் வெளியேறிவிடும். இதனால் உடலில் தளர்ச்சி, மனதில் அச்சம் ஏற்பட்டு மன அழுத்தத்துடனே, வேலைகளில் கவனமின்றி இருந்து வருவார்கள்.
இதற்கு நல்ல தீர்வை பழம்பாசி அளிக்கும். பழம்பாசி இலைகளை உலர்த்திப் பொடியாக்கி, அத்துடன் வறுத்து இடித்த ஜீரகம் மற்றும் வெந்தயம் இவற்றை ஒன்றாக்கி வைத்துகொண்டு, தினமும் காலையும் மதியமும் ஒரு தேக்கரண்டி அளவு இந்தப் பொடியை எடுத்து மோரில் கலந்து குடித்துவர, நாளடைவில், சிறுநீர் இயல்பாகக்கழியும். உடல்நலம் தேறி, மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.
ஊளைச்சதை
பழம்பாசியை உலர்த்தி இடித்து தூளாக்கி, அதை தினமும் நீரில் அல்லது மோரில் கலந்து இருவேளை சாப்பிட்டுவர, தொங்கும் ஊளைச்சதை கரைந்து, இரத்த அழுத்த பாதிப்புகளை விலக்கி, இரத்த சோகையையும் குணமாக்கும். நரம்புத்தளர்ச்சி மற்றும் சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும் தன்மைமிக்கது, பழம்பாசி மூலிகைப்பொடி.