பல ஆண்டுகளாக தன்னை மோசமாக நடத்திவந்த தந்தையை கமெராவை மறைத்துவைத்து பொலிசாரிடம் சிக்கவைத்திருக்கிறாள் ஒரு மகள்.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Damon Becnel (47) என்பவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். 14 வயது மகளை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
அவர் பல ஆண்டுகளாக மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக அவளது தாய் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அவள் தன் தந்தையைக் குறித்து பல முறை புகாரளிக்க முயன்றும் அதிகாரிகள் அவளை நம்பவில்லையாம்.
கடைசியாக வேறு வழியில்லாமல் அவரை சிக்க வைக்க முடிவு செய்த அந்த பெண், தன் வீட்டில் இரண்டு கமெராக்களை மறைத்து வைத்துள்ளாள்.
வழக்கம் போல மகளிடம் கத்தும் Damon அவளை நெஞ்சில் தலையால் முட்டியதோடு, மோசமான வார்த்தைகளால் கடுமையாக திட்டியிருக்கிறார்.
அத்துடன் அந்த வீட்டிலிருந்த நாய்களையும் தாக்கும் அவர், கத்தி ஒன்றை எடுத்து அதன் கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டியும் இருக்கிறார்.
அந்த வீடியோக்களை பொலிசாரிடம் ஒப்படைத்ததால், பொலிசார் Damonஐக் கைது செய்துள்ளனர்.
அவர் மீது குழந்தையை கொடுமைப்படுத்தியது மற்றும் நாயை கொடுமைப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.