யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலை அடுத்து பொதுமக்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணி அளவில் இடம்பெற்றது.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி இளைஞர்கள் தெரிவித்தனர்.
வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.