நமது அன்றாட வாழ்க்கையில் பல விதமான பொருட்கள் நம்மிடையே பிரிக்க இயலாத பந்தத்தினை பெற்றுள்ளது. அந்த வகையில்., தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் என்பது நமது கலாச்சாரத்தில் அன்றிலிருந்து தவிர்க்க இயலாத பொருளாகும்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு., பெண்ணிற்கு., ஆணிற்கு., ஆடம்பரத்திற்கு என அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அனைவரும் வாங்கி அணிந்து., அணிவித்து மகிழ்வுருவது வழக்கம்.
அந்த வகையில்., கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்தும்., பின்னர் சற்று குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும்., தேசிய பங்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் விலை வீழ்ச்சியும்., உச்சமும் கண்டு வருகிறது.
24 கேரட் மதிப்பியுள்ள ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,100 க்கும்., ஒரு சவரன் ரூ.32,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்., 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,802 க்கும்., ஒரு சவரன் ரூ.30,416 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைப்போன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.49.30 க்கும்., 8 கிராம் அளவுள்ள வெள்ளியின் மதிப்பு ரூ.394.40 க்கும்., 10 கிராம் அளவுள்ள வெள்ளியின் மதிப்பு ரூ.493 க்கும்., 100 கிராம் வெள்ளியின் மதிப்பு ரூ.4,930 க்கும்., ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,300 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றத்தாழ்வுடன் அவ்வப்போது இருந்தாலும்., மொத்தமாக அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.