பல்வலிக்கு முக்கிய காரணம் ஒழுங்கான முறையான பராமரிப்பின்மை தான். பல் சுகாதாரமில்லாமல் இருக்கும் பட்சத்தில், பல்சொத்தை, ஈறுகளில் பிரச்னை போன்றவை எளிதில் ஏற்பட கூடும். அதுமட்டுமில்லை. சர்க்கரை வியாதி, குறைப்பிரசவம், பக்கவாதம், இதய நோய்களையும் இது உருவாக்கவல்லது.
இன்றைய காலகட்டத்தில் பல்மருத்துவம் முன்னேறிய போதும், பல் பாதிப்பு, பல் சொத்தை, ஆகியவை எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால், இனிப்புகள், ஆசிட் மற்றும், சர்க்கரை போன்றவற்றையே ஏற்படுகிறது. பல்லில் உள்ள எனாமல் தேயும் பொழுது, பற்களில் ஓட்டை ஏற்படுகிறது.
பல்வலி ஏற்படும் முன் முதலில் பாதிக்கப்பட்ட இடம் மிருதுவாக இருக்கும். பின்னர், வலி லேசாக ஆரம்பிக்கும். குளுமையாகவோ அல்லது சூடாகவோ சாப்பிட்டால் அந்த இடத்தில வலிக்கும். இவை ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகினால் குணப்படுத்துவது எளிமையாக இருக்கும். பொதுவாக வருடம் ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
கீழ்க்காணும் சில வழிமுறைகளை பின்பற்றி பற்களை பாதுகாக்க முயற்சிக்கலாம்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள் நமது பல்லை பாதுகாக்க உதவுகிறது. பாஸ்பரஸ், கால்சியம், பாஸ்பேட் எனாமலை உறுதி பெற வைக்கின்றது.
விதைவகை உணவுகள், முட்டை, தக்காளி, பீன்ஸ், பூண்டு போன்றவை பல்லிற்கு உறுதியை ஏற்படுத்தும். தினமும் உண்ணும் உணவில் 5 % சதவீதத்திற்கு மிகாமல் இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம். இது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட விஷயம் ஆகும்.
சோடா போன்றவற்றை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. வாயில் வறட்சி இல்லாமல் இருந்தால் தான். பாதிப்புகள் இல்லாமல் இருக்கும். எனவே, தூங்கும் பொழுது வாய் முடி இருப்பது அவசியம். திறந்திரும் சமயத்தில் வாய் உலர்ந்து காணப்படும்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல் பவுடர் மற்றும் பசையினை உபயோகிக்கலாம். ஆயுர்வேத எண்ணெயில் வாய்கொப்பளிப்பது, காய்கறிகள், பழச்சாறுகள் உண்ணுவது நல்லது. தினமும் நான்கைந்து முந்திரியை எடுத்து கொள்வது சிறந்தது.