மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க இது உதவுகிறது.
தாமரையின் பூ, மகரந்தம், தண்டு, கொட்டை, விதை என அதன் அனைத்துமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மூளை திசுக்களை பாதுகாத்து மூளையை விழிப்புணர்வுடன் இருக்க தாமரைப்பூ பெரிதும் உதவுகிறது.
இதனால் இதயத்தில் ரத்த அழுத்தம் சீராகி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
இதன் இதழ்களை நீரில் போட்டு மிளகு ஏலக்காய் சேர்த்து சண்ட காய்ச்சி, அந்நீரை 60 நாட்கள் பருகினால், இதய தசைகள் வலுப்பெறும்.
பாதிக்கப்பட்ட கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்க வெண்தாமரை சிறந்த உணவாகும்.
இதன் தண்டினை சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.
தாமரையின் நடுவில் இருக்கும் மகரந்ததை கஷாயம் செய்து பருகினால் காது நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு ஏற்படாது.
இதன் விதைகள் சிறுநீரகத்தின் திசுக்களை பாதுகாக்கும். எடையை குறைக்கும். ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவற்றைக் குறைக்கும்.