தேவையான பொருள்கள் :
பப்பாளி பழம் – 1
இஞ்சி – சிறிய துண்டு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 1
தேன் – தேவையான அளவு.
செய்முறை :
பப்பாளி பழத்தின் தோலை சுத்தம் செய்து விட்டு, கொட்டையை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும். எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும். மிக்சியில் நறுக்கிய பப்பாளி பழம், இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
சுவையான பப்பாளி இஞ்சி ஜூஸ் தயார்.!