தேவைப்படும் பொருட்கள் :
பப்பாளி இலை – ஐந்து
தண்ணீர் – 2 கப்
தேன் – 1 ஸ்பூன்
செய்யும் முறை :
பப்பாளி இலைகளை சிறிதாக நறுக்கவும்.
பின்னர், பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்கும்போது நறுக்கிய பப்பாளி இலைகளை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இலைகள் சுருங்கத் துவங்கியதும் ஸ்பூனால் கிளறிவிட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொஞ்சம் இறுகியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
தற்போது தண்ணீரில் உள்ள இலைகளை வடிகட்டிக்கொள்ளவும். தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் ஆரோக்கியமான பப்பாளி டீ தயார்.