பிகில் படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தவர் நடிகர் கதிர். விஜய் ரசிகரான இவருக்கு இந்த படம் மைல் ஸ்டோன் போல அமைந்தது.
அதற்கு முன் அவர் பரியேறும் பெருமாள், கிருமி படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்த நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றிருந்தார்.
தற்போது சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டும் வெப் சீரிஸிஸ் இவரும் இறங்கியுள்ளார்.
விக்ரம் வேதா படத்தின் இயக்குனர் புஷ்கர் காயத்திரி இயக்கும் புதிய வலைதொடரில் கதில் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.