மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணைய உலாவியான இன்டர்நெட் எக்ஸ்ப்புளோரர் ஒரு காலத்தில் முன்னணி இணைய உலாவியாக திகழ்ந்தமை தெரிந்ததே.
எனினும் கூகுள் குரோம், மொஸில்லா ஃபயர் பாக்ஸ் என்பவற்றின் வருகையைத் தொடர்ந்து பின்னிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிய மாற்றத்துடன் மைக்ரோசொப்ட் எட்ஜ் எனும் பெயருடன் தனது புதிய உலாவியினை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.
இவ் உலாவியானது ஏனைய முன்னணி உலாவிகளுக்கு சவால் விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் தற்போது புதிய மைக்ரோசொப்ட் எட்ஜ் உலாவி வெளியிடப்பட்டுள்ளது.
விண்டோஸ் மற்றும் MacOS என்பவற்றிற்காக இப் புதிய உலாவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 கணினிகளில் இதனை நிறுவும்போது ஏற்கணவே உள்ள பதிப்பின் மீது மீள நிறுவப்படும்.
அத்துடன் மேலதிக அப்டேட்களையும் நிறுவவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.