சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமாக ஹுவாவி திகழ்கின்றது.
இந்நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.
Huawei Mate X எனும் குறித்த கைப்பேசியானது கைப்பேசி பிரியர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இப்படியிருக்கையில் இதன் புதிய பதிப்பு ஒன்றினை இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மடிக்கக்கூடிய கைப்பேசியானது Huawei Mate Xs என அழைக்கப்படுகின்றது.
இக் கைப்பேசி எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் இக் கைப்பேசி காட்சிப்படுத்தப்படும் எனவும் நம்பப்படுகின்றது.