ஹுவாவி நிறுவனத்தின் துணை நிறுவனமான Honor தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Honor 9X எனும் குறித்த கைப்பேசியானது 6.59 அங்குல அளவு, 2340 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Kirin 710 processor, பிரதான நினைவகமாக 4GB மற்றும் 6GB RAM, சேமிப்பு நினைவகமாக 64GB மற்றும் 128GB என்பனவற்றினைக் கொண்டு இரு பதிப்புக்களாக வெளியாகியுள்ளது.
இவற்றில் 16 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கமெரா ஒன்றும், 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.
இதேவேளை 4GB RAM உடைய கைப்பேசியின் விலை 13,999 இந்திய ரூபாய்கள் ஆகவும், 6GB RAM கொண்ட கைப்பேசியின் விலை 16,999 ரூபாய்கள் ஆகவும் காணப்படுகின்றது.